Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அணிக்கு எதிராக ஹரியான வலுவானத் தொடக்கம்

Webdunia
சனி, 25 டிசம்பர் 2010 (11:25 IST)
தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் ஹரியானா அணி முதல் இன்னிங்சை சிறப்பாக தொடங்கி இருக்கிறது.

ரஞ்சி கிரிக்கெட்டில் நேற்று கால்இறுதி ஆட்டங்கள் தொடங்கின. தமிழ்நாடு- ஹரியானா இடையிலான கால்இறுதி ஆட்டம் ஹரியானாவில் உள்ள ரோடாக்கில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த தமிழக அணி முதலில் ஹரியானாவை பேட் செய்ய பணித்தது. இதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஹரியானா அணி, தமிழக அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக சமாளித்து ரன்களை சேகரித்தது.

முதல் நாள் முடிவில் ஹரியானா அணி 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் நிதின் சாய்னி 137 ரன்களும் (நாட்-அவுட்), சன்னிசிங் 107 ரன்களும் விளாசினர்.

எக்ஸ்டிரா வகையில் தமிழக வீரர்கள் 35 ரன்களை விட்டுகொடுத்தனர். தமிழகம் தரப்பில் அஷ்வின், சுனில்சாம் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிரான மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பங்கஜ்சிங் மிரட்டினார். அவரது பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலம் வாய்ந்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பங்கஜ்சிங் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

கர்நாடகாவுக்கு எதிரான இன்னொரு ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி தனது முதல் இன்னிங்சில் 200 ரன்களில் சுருண்டது.

ரெயில்வே-பரோடா இடையிலான மோதலில் முதலில் பேட் செய்த ரெயில்வே அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

Show comments