Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் பட்டிற்கு 7 ஆண்டுகள் தடையா?

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (11:57 IST)
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்டிற்கு 7 ஆண்டுகாலத் தடை விதிக்கப்படலாம் என்று ஐ.சி.சி-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற இரு வீரர்களான மொகமட் ஆசிப், மொகமட் ஆமீர் ஆகியோர் 2 ஆண்டுகள் தடை விதிப்பு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தோஹாவில் ஐ.சி.சி.-யின் ஊழல் தடுப்பு மையத்தின் விசாரணை அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதில் இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கறிஞர்கள் அடிக்கடி மாறுவதும், ஐ.சி.சி-யை அவர் எதிர்த்துக் கொள்வதும் அவர் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.சி.சி. மற்றும் அதன் ஊழல் தடுப்புப் பிரிவு சல்மான் பட் மற்றும் ஆசிப், அமீருக்கு எதிராக சாட்சியங்களை பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கேப்டன் சல்மான் பட் செய்யச் சொன்னதை இவர்கள் செய்ததால் அமீர், ஆசிப் இரண்டு ஆண்டுகள் தடையுடன் தப்பிக்கலாம் என்றும் மேலும் இவர்கள் ஐ.சி.சியுடன் ஒத்துழைப்பு நல்குவதால் இவர்கல் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்த மூவரில் சல்மான் பட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்களே இந்த வழக்கிலிருந்து விலகியிருப்பது பட்டிற்கு சாதகமான நிலைமைகள் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதாக ஐ.சி.சி. வட்டாரம் தெரிவிக்கிறது.

விஷயங்களை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை மேலும் சிக்கலுக்குள்ளாக்கவுள்ளது. அதாவது இந்த 3 வீரர்களுக்கு எதிரான சாட்சியங்களை அது திரட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

Show comments