Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வுக்குழு மீது ஸ்டூவர்ட் மெகில் தாக்கு

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2010 (12:20 IST)
பெர்த் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்ட்ரேலிய அணியில் அன்பவமற்ற உள்ளூர் வீரர் மைக்கேல் பியர் என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது. தவறு என்று ஆஸ்ட்ரேலியத் தேர்வுக்குழுவைச் சாடியுள்ளார் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெகில்.

மைக்கேல் பியர் ஆஸ்ட்ரேலியாவுக்கு விளையாடும் அளவுக்கு இன்னும் தகுதி பெறவில்லை. மேலும் அவர் பெர்த்தில் விளையாடி பழக்கமுள்ளவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. அவர் 3,4 போட்டிகளில் விளையாடியிருப்பார் அதிலும் ஒரு போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த சிரமப்பட்டுள்ளார். அவரை எப்படி தேர்வு செய்ய முடியும்? என்று கேட்டுள்ளார் ஸ்டூவர்ட் மெகில்.

அதே போல் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சேவியர் டோஹெர்ட்டி இடம்பெற்றிருக்கக்கூடாது என்று கூறியுள்ள மெகில், நேதன் ஹாரிட்ஸ் அணியில் இடம்பெறவேண்டும் என்றார்.

அவருக்கு இவ்வளவு சீக்கிரம் ஆஸ்ட்ரேலியா ஓய்வு அறிவிக்கும் எண்ணத்தை அணித் தேர்வுக்குழுவினர் உருவாக்கியிருக்கக்கூடாது. என்றும் மெகில் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

Show comments