Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியச் சுழலில் சிக்கியது நியூஸீலாந்து; 103 ரன்களுக்கு சுருண்டது

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2010 (16:42 IST)
சென்னையில் நடைபெற்று வரும் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி 27 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டது.

ஜேமி ஹவ், ஸ்டைரிஸ் இடையே 13 ஓவர்களில் 43 ரன்கள் 4-வது விக்கெட்டுக்குச் சேர்க்கப்பட்டதுதான் சிறந்த கட்டமாக இருந்தது.

முதலில் நெஹ்ரா முக்கிய விக்கெட்டுகளான மெக்கல்லம் (14), டெய்லர்(9) ஆகியோரை வீழ்த்த பின்னர் அஷ்வின், யுவ்ராஜ், யூசுப் பத்தான் பந்துகள் திருப்ம நியூஸீலாந்து அணியால் விளையாட முடியவில்லை.

ஜேம்ஸ் பிராங்கிளின் ஒரு முனையில் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருக்கையில் மறு முனையில் அஷ்வின் மில்ஸ், சவுதீ விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த நியுஸீலாந்து இந்தியாவுக்கு எதிராக அதன் மிகக்குறைவான ஒரு நாள் ரன் எண்ணிக்கையை எடுத்தது.

அஷ்வின் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் யூசுப் பத்தான் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் யுவ்ராஜ் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நெஹ்ரா 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். படேல் 3 ஓவர்களில் 9 ரன்களை கொடுத்தார்.

பிரவீண் குமார் 6 ஓவர்களில் 20 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கடைசி 6 விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு இழந்தது நியூஸீலாந்து அதிகபட்சமாக ஸ்டைரிஸ் 24 ரன்களை எடுத்தார்.

உணவு இடைவேளைக்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருப்பதால் இந்தியா உடனடியாக களமிறங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments