Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்சன், ஹேடினை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகப் புகார்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010 (11:40 IST)
இந்திய சூதாட்டக் காரர்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிழலுலக தாதா ஒருவர் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணம் மேற்கொண்டபோது ஷேன் வாட்சன், பிராட் ஹேடின் ஆகியோரை அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தங்கியிருந்த வெஸ்ட் லண்டன் விடுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் கடந்த ஆண்டு உலக இருபதுக்கு 20 தொடரின் போது வந்து சந்தித்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் உடனெயே இரண்டு வீரர்களும் அதிகாரிகளை அணுகி இது போன்று தங்களை ஒருவர் சந்திக்க முயன்றதாக புகார் தெரிவித்தனர்.

பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று நடத்திய பத்திரிக்காவாத விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மஜார் மஜீத் என்ற சூதாட்டக்க்காரர் பல பாகிஸ்தான் விரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக செய்திகள் வெளியானதையடுத்து தற்போது வாட்சன், ஹேடின் இருவரும் இதனை தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை இதனையடுத்து மஜீத்தை கைது செய்தனர். ஆனால் அவருக்கு உடனே பிணணயும் அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான மொகமட் ஆமீரும், மொகமட் ஆசிப்ப்பும் சொல்லிய நேரத்தில் நோ-பால்களை வீசியதாக மாறுவேடத்திலிருந்த பத்திரிக்கையாளரிடம் மஜீத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

Show comments