Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பலுக்கு ஜாகிர் கானும் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (16:45 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக் 2 ஆண்டு காலம் இருந்தார்.

அவர் பயிற்சியாளராக இருந்த போது அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியுடன் மோதல் ஏற்பட்டது. அவரால் கங்குலியின் கேப்டன் பதவி பறிபோனது.

கிரேக்சேப்பல் மீது ஹர்பஜன்சிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் ஏற்கனவே கடுமையாக குறைகூறி இருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கானும் சேப்பலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள் பேட்டியில், சேப்பலின் பயிற்சியின் கீழ் செயல்பட்டது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான காலம் என்றும், 2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறினார்.

தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தெரியவில்லை என்றும் ஜாகிர் கான் கூறியுள்ளார்.

இந்திய அணியில் விளையாடுகையில் எப்போதுமே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி எப்போதுமே சிறப்பாக தான் விளையாடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தொடருக்கு முன்பு தான் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருந்ததாகவும், எடை அதிகமாக இருந்ததாகக் கூறி நீக்கியதாக கூறப்பட்டது என்று குறிப்பிட்ட ஜாகிர் கான், ஒரே நாளில் எடையைக் குறைத்து விட முடியுமா? என்று வினவினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

Show comments