Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கூலி முடிவால் ஆச்சரியமடைந்தேன் -சச்சின்!

Webdunia
ஆஸ்ட்ரேலிய தொடருடன் ஓய்வு பெறுவதாக கங்கூலி அறிவித்தது தனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், மூத்த வீரர்கள் மதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

" மூத்த வீரர்கள் இந்த நாட்டின் கிரிக்கெட்டிற்காக நிறைய பங்களிப்பு செய்துள்ளனர் இதனை நாம் மதிக்கப்பழகவேண்டும். மூத்த வீரர்களிடம் மதிப்பில்லாமல் இருப்பது வேறு எங்கும் நிகழாத ஒன்று. எங்களுக்கு விளையாட்டிலிருந்து எப்போது விலக வேண்டும் என்பது தெரியும். ஆனால் எல்லோரும் அவரவர் கருத்துக்களை கூறுகின்றனர். சில வேளைகளில் இந்த கருத்துக்கள் சரியாக இருப்பதில்லை. தனி நபர்களுக்கு எது சரியான நேரம் என்பது குறித்த முடிவை எடுக்க உரிமை உள்ளது.

சௌரவ் கங்கூலி ஓய்வு பெறுவது குறித்த முடிவு பற்றி ஆச்சரியமடைந்தேன், இந்த முடிவுக்கு அவர் வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகியிருக்கும், ஆனால் அவர் இதுதான் சரி என்று நினைக்கும் பட்சத்தில் அவரது முடிவை மதிக்கவேண்டும ்".

இவ்வாறு அந்த நேர்காணலில் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

Show comments