Webdunia - Bharat's app for daily news and videos

Install App

299 ரன்கள் இலக்கு: சேவாக், திராவிட் அவுட்-24/2

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (10:56 IST)
பெங்களூருவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 299 ரன்களை ஆஸ்ட்ரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 24 ரன்கள் எடுத்துள்ளது.

PTI PhotoFILE
கடைசி நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்ததது. ஷேன் வாட்ஸன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட் ஹட்டின் 35 ரன்கள், வொய்ட் 18 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 299 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை துவக்கியது. அதிரடியாக விளையாடி ஆஸ்ட்ரேலிய பந்துவீச்சாளர்களை திணறடிப்பார் என்று இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் சேவாக் 6 ரன்கள் எடுத்த நிலையில், கிளார்க் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஹைடனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டிராவிட் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிரெட்லீ பந்தில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8வது ஓவரின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் சேர்த்திருந்தது. கம்பீர் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

Show comments