Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு ஒரு நாள் தொடர்: தெ.ஆ. மறுப்பு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (12:24 IST)
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட இடைவெளியில் தென் ஆப்பிரிக்காவில் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடத்தப்படலாம் என்று முன்மொழியப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தற்போது அந்தத் தொடரை நடத்த இயலாது என்று அறிவித்துள்ளது.

இதனை தென் ஆப்பிரிக்க வாரியம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக பாக். கிரிக்கெட் வாரிய தலைமை செயல்முறை அதிகாரி ஷஃப்கத் நாக்மி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால், இந்த தொடரை நடத்த விரும்பவில்லை என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையுடன் ஒரு நாள் தொடரை விளையாட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

Show comments