Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநா‌‌ள் அ‌ணி‌யி‌ல் விராட்: இஷாந்துக்கு ஓய்வு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:07 IST)
இலங்கைக்கு எதிராக வரும் 18ஆம் தேதி துவங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுடனான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில், இலங்கை தொடருக்கான ஒருநாள் அணி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது.

இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: மகேந்திர சிங் தோனி (தலைவர்), சச்சின், கம்பீர், சேவாக், யுவராஜ், ரோஹித் சர்மா, ரெய்னா, விராட் கோஹ்லி, பார்தீவ் படேல், இர்ஃபான் பதான், பிரவீன்குமார், ஹர்பஜன், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், முனாஃப் படேல், பிரஜ்ஞான் ஓஜா.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணி: மகேந்திர சிங் தோனி (தலைவ‌ர்), சச்சின், கம்பீர், சேவாக், யுவராஜ், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி, இர்ஃபான் பதான், பிரவீன்குமார், ஹர்பஜன், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, ஓஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments