Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலே டெஸ்ட்: 170 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Webdunia
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2008 (16:41 IST)
இலங்கையின் காலேவில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 170 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் சம நிலையை அடைந்துள்ளன.

307 ரன் வெற்றி இலக்குடன் இன்று 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை இந்தியப் பந்து வீச்சு கட்டுப்படுத்தியது.

இலங்கை அணி 47.3 ஓவரில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணியின் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், அனில் கும்ளே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஜாகிர் கான் ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

முன்னதாக் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து இலங்கை அணி வெற்றிபெற 307 ரன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2- வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. அந்த அணியின் சமரவீரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன் சேர்த்தார். தில்ஷான் 38 ரன் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 4ம் நாளன்றே காலே டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு, இது வெற்றியாக அமைந்ததால், இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலையை அடைந்துள்ளன. ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையே 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 8ம் தேதி கொழும்புவில் தொடங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!