Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- இலங்கை இ‌ன்று பலப‌‌ரீ‌ட்சை!

Webdunia
ஞாயிறு, 6 ஜூலை 2008 (12:25 IST)
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இ‌ன்று கராச்சியில் மோதுகின்றன. இது பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த தொடர் முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்கள் சரியாக வீசவில்லை. மாறாக சேவாக், கம்பீர், ரெய்னா, யுவ்ராஜ், தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் பேட்டிங் திறமையால் இந்தியா மிகப்பெரிய இலக்குகளை வெற்றிகரமாக துரத்தி வந்துள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை பேட்டிங், பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக அஜந்தா மென்டிஸ் என்ற சுழற்பந்து வீச்சாளர் என்ன வீசப்போகிறார ் என்பதை கணிப்பது கடினம். இவர் ஆஃப்ஸ்பின், லெக்ஸ்பின், தூஸ்ரா, லெக் கட்டர், ஆஃப் கட்டர், சாமர்த்தியமான வேக நேர் பந்து ஒன்று என 6 பந்துகளையும் விதம் விதமாக வீசி அசத்தி வருகிறார்.

சமிந்தா வாஸ், முரளிதரன் எப்பவும் போல் நன்றாக வீசி வருகின்றனர். இலங்கை பேட்டிங்கும் பலமாக உள்ளது. எனவே கடந்த ஆசியக் கோப்பை சாம்பியன்களான இலங்கையை வீழ்த்த இந்தியா கடுமையாக போராட வேண்டி வரும் என்று தெரிகிறது.

ஆட்டக்களம் ரன் குவிப்பு ஆட்டக்களமாகவே தொடரும் என்று தெரிகிறது. 8 ஆசிய கோப்பை போட்டிகளில் 7 முறை இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரம் இ‌ன்று மாலை 3.30 மணிக்கு இறுதிப் போட்டி துவங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

Show comments