Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷான் மார்ஷ் அபாரம்! ஆஸ்ட்ரேலியா வெற்றி!

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (15:00 IST)
செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஆஸ்ட்ரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பூவா தலையா வென்ற மேற்கிந்திய அணி முதலில் ஆஸ்ட்ரேலிய அணியை பேட் செய்ய அழைத்தது. தன் முதல் ஒரு நாள் சர்வதேச போட்ட ி‌யி‌ல் விளையாடும் ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் ஷான் மார்ஷ் அபாரமாக விளையாடி 84 ரன்களைக் குவித்தார்.

ஷேன் வாட்சனும் (31), ஷான் மார்ஷும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 12.5 ஓவர்களில் 75 ரன்கள் என்ற அபாரத் துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு வாட்சன், பாண்டிங் (5) மைக்கேல் கிளார்க் (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 25வது ஓவரில் 117/3 என்று ஆனது.

அதற்குள் ஷான் மார்ஷ் அதிரடியாக 97 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 81 ரன்களை விளாசி சதம் எடுக்கும் குறிக்கோளுடன் ஆடிய போது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆஸி.140/4 என்று ஆனது.

பிறகு பிராட் ஹேடினும் மைக் ஹஸ்ஸியும் இணைந்து நிலை நிறுத்தப் பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 91 ரன்களை சேர்த்தனர். 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் பிராட் ஹேடின் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மைக் ஹஸ்ஸி 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் ஆஸ்ட்ரேலியா 273/8. மேற்கிந்திய தரப்பில் சம்மி, பிராவோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மேற்கிந்திய அணி இலக்கை துரத்திய போது புது முக வீரர் சேவியர் மார்ஷல் 6 ரன்கள் எடுத்திருந்தபோது பிரட் லீயின் அதிகம் எழும்பிய பந்தை கட் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.

பிறகு கெய்ல் (20), சர்வாண் (2), பிளெட்சர் (26), பிராவோ (33) பெவிலியன் திரும்ப மேற்கிந்திய அணி 92/5 என்று ஆனது.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய வெற்றி வெறும் சம்பிரதாயமாக அமைந்தது. ராம்தின் (31), சம்மி (33) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 40-வது ஓவரில் மேற்கிந்திய அணி 189 ரன்களுக்கு சுருண்டு 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

ஆஸ்ட்ரேலிய அணியில் பிராக்கன் 4 விக்கெட்டுகளையும், பிரட் லீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் சர்வதேச தொடரில் ஆஸ்ட்ரேலியா 1- 0 என்று முன்னிலை வகிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

Show comments