Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபதுக்கு 20: ஆஸ்ட்ரேலியா தோல்வி!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (10:22 IST)
பிரிட்ஜ் டவுன், பார்படோஸில் நடைபெற்ற இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்ட்ரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் அணிக்கு 11 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது.

பூவா தலையா வென்ற மேற்கிந்திய அணி ஆஸ்ட்ரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.

ஐ.பி.எல். புகழ் ஷான் மார்ஷ், மற்றும் ரோஞ்ச்சி ஆகியோர் களமிறங்கி 6 ஓவர்களில் 57 ரன்களை விளாசினர். மார்ஷ் 22 பந்துகளில் 29 ரன்களையும், ரோஞ்ச்சி 22 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 36 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வாட்சன் 17 ரன்கள் எடுத்தார். கிரேக் ஒயிட் 10 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் ஆஸ்ட்ரேலியா 97 ரன்களை மட்டுமே எடுத்தது.

இலக்கை துரத்தக் மேற்கிந்திய அணி களமிறங்கியது. அந்த அணியின் புதுமுக அதிரடி வீரர் சேவியர் மார்ஷல் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விளாசி 36 ரன்கள் குவித்தார். இதனால் 21 பந்துகளில் மேற்கிந்திய ஸ்கோர் 53 ரன்களை எட்டியது.

பிறகு பிராவோ 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர் சகிதம் 28 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார். 9.1 ஓவரில் மேற்கிந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகான சேவியர் மார்ஷல் தேர்வு செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!

இந்தியாவுக்காக அதிகப் போட்டிகள்… தோனியைப் பின்னுக்குத் தள்ளி சாதனைப் படைத்த கோலி!

தோனியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சிஎஸ்கே நிர்வாகம்… என்ன முடிவெடுக்கப் போகிறார் ‘தல’?

சொந்த மண்ணில் அதிக டக்-அவுட் வெளியேற்றம்! - 46 ரன்களில் இந்தியாவை மூட்டை கட்டிய நியூசிலாந்து!

Show comments