Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.பி.எல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: யுவரா‌ஜ் அ‌ணி‌‌க்கு 2வது தோ‌ல்‌வி!

ஐ.பி.எல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: யுவரா‌ஜ் அ‌ணி‌‌க்கு 2வது தோ‌ல்‌வி!
, செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (09:34 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சா‌ப் அ‌ணியை தோற்கடித்தது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி‌யி‌ன் 4-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வார்‌ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. இந்த ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.

பூவா தலையா வெ‌ன்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி தலைவ‌ர் யுவராஜ் சிங் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக கரண் கோயல், ஹோப்ஸ் ஆகியோர் களம் இறங்கின‌ர். அ‌திரடியாக ‌விளையாடிய கோயல்,
மு‌னா‌ப் ப‌ட்டே‌ல் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அ‌ப்போது அ‌ணி‌யி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 34 ஆக இரு‌ந்தது. இவ‌ர் 21 பந்துகளில் 2 ‌சி‌க்ச‌ர், 3 பெ‌ண்ட‌ரிகளுட‌ன் 26 ரன் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய சங்கக்கரா 20 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அவரது ‌வி‌க்கெ‌ட்டை வா‌ர்‌ன் கை‌ப்ப‌ற்‌றினா‌‌ர். அடுத்து வந்த ஜெயவர்த்தனே 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலை‌வ‌ர் யுவராஜ்சிங், ஹோப்சுட‌ன் இணை சே‌ர்‌ந்தா‌ர். 16 ரன் எடுத்த ஹோ‌ப்‌ஸ், வார்னே பந்‌தி‌ல் எல்.பி.டபிள்யூ ஆ‌கி ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அப்போது அணியின் எ‌ண்‌ணி‌க்கை 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்னாக இருந்தது.

அடுத்து ப‌த்தான், யுவராஜ் சிங்குடன் இணை சேர்ந்தார். யுவராஜ் சிங்கிடம் அதிரடியாக ‌விளையாடி அணியின் எ‌ண்‌ணி‌க்கையை வேகமாக உயர்‌த்‌தினா‌ர்.

16.5 ஓவர்களில் அணியின் எ‌ண்‌ணி‌க்கை 136 ரன்னாக இருந்த போது யுவராஜ் சிங், வார்னே பந்‌தி‌ல் ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தா‌ர். யுவராஜ் சிங் 34 பந்துகளில் 3 ‌சி‌க்ச‌ர், 6 பெ‌ண்ட‌ரியுட‌ன் 57 ரன் குவித்தார். அடுத்து பதான் 12 ரன்னிலும், பிரெட்லீ ரன் எதுவும் எடுக்காமலும், சன்னி சோகைல் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

முடி‌வி‌ல் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வார்‌ன் 3 விக்கெட்டும், சித்தார்த் திரிவேதி 2 விக்கெட்டும், முனாப் பட்டேல், தினேஷ் சாலுங்கே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றின‌ர்.

167 ரன்க‌ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் ராயல்ஸ் அணி ‌விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கயூப் 5 ரன்னிலும், கம்ரன் அக்மல் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ூசுப் பதான் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் 3 விக்கெட்டுக்கு 48 ரன் என்ற நிலையில் இருந்தது.

4-வது விக்கெட்டுக்கு வாட்சன்-லெக்மன் இணை சே‌ர்‌ந்து சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. லெக்மன் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து ஜடேஜா, வாட்சனுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

18.1 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாட்சன் 49 பந்துகளில் 5 ‌சி‌‌க்ச‌ர், 5 பெ‌ண்ட‌ரியுட‌ன் 76 ரன்னும், ஜடேஜா 25 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

ஆ‌ட்டநாயகனாக வாட்சன் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர். பஞ்சாப் அணி தரப்பில் பிரெட்லீ, ஸ்ரீசாந்த், ஹோப்ஸ், இர்பான் பதான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil