Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ச்‌சி‌ன் அ‌ணியை ‌வீ‌ழ்‌த்‌தியது ‌திரா‌வி‌ட் அ‌ணி!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (10:05 IST)
மும்பையில் நடந் த நே‌ற்று இரவு நட‌ந்த இருபது 20 போ‌‌ட்‌டி‌யி‌ல் ‌திரா‌வி‌ட் தலைமை‌யிலான ராயல் சேலஞ்சர்ஸ் அண ி, ச‌ச்‌சி‌ன் தலைமை‌யிலான மும்பை அ‌ணியை 5 வ‌ி‌க்கெ‌‌ட் ‌வி‌‌த்‌தியாச‌த்‌தி‌ல் வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 5-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும் மும்பை வான்கடே மைதான‌த்‌தி‌ல் நேற்றிரவு ‌ விளையாடியத ு. காய‌ம் குணமடையாததா‌ல் ச‌ச்‌சி‌னு‌க்கு ப‌தி‌ல் ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை ஏற்றார்.

பூவா தலையா வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. ராபின் உத்தப்பா 48 ரன் க‌‌ள் சே‌ர்‌த்தா‌ர். இ‌தி‌ல் ஒரு ‌சி‌க்ச‌ர், 5 பெள‌ண்ட‌ரிக‌ள் அட‌‌‌‌ங்கு‌ம்.

அ‌திரடியாக ‌விளையாடிய ஜெயசூ‌ர்யா 16 ப‌ந்துக‌ளி‌ல் 29 சே‌ர்‌த்தா‌ர். இ‌தி‌ல் ஒரு ‌சி‌‌க்ச‌ர், 5 பெள‌ண்ட‌ரிகளை ‌விளா‌சினா‌ர். பொல்லாக் 28 ரன்களும், நாயர் 20 ரன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணி தரப்பில் ஜாகீர்கான், அகில் தலா 2 விக்கெட்டுகளும், பிரவின்குமார் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து 166 ரன்கள் எடு‌த்தா‌ல் வெற்றி இலக்குடன் இன்னிங்சை தொடங்கிய பெங்களூர் அணிக்கு சந்தர்பால் (16 ரன்), அ‌ணி‌த் தலைவ‌ர் ‌த ிராவிட் (32 ரன்) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர்.

அடுத்து வந்த டெய்லர் (23 ரன்), கோக்லி (23 ரன்) ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார்கள். கடைசி 3 ஓவரில் பெங்களூர் அணிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. பவுச்சர் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனா‌ல் பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 பந்துகளில் 4 பெ ளண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் விளாசி பவுச்சர் ஆட்டம் இழக்காமல் இருந்தார். க ாலீஸ் 25 ரன்கள் சேர்த்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

Show comments