Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அபார வெற்றி! தொடர் சமன்!

Webdunia
ஞாயிறு, 13 ஏப்ரல் 2008 (17:45 IST)
இந்திய - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையே கான்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது!

இந்த வெற்றியையடுத்து, 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத்தொடரை 1-1 என்று இந்தியா சமன் செய்தது.

62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக்கும், வாசிம் ஜாஃபரும் துவக்கம் முதலே வேகமாக ஆடத் தொடங்கினர். 3.3 ஓவ‌ர்க‌ளி‌ல ் இந்திய அணி 32 ரன்கள் எடுத்தத ு.

வீரேந்திர சேவாக் 12 பந்துகளில் 2 சிக்ஸர்களுடனும், ஒரு பெளண்டரியுடனும் 22 ரன்களுக்கும், ஜாஃபர் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

அதன்பிறகு இணை சேர்ந்த கங்கூலியும் (13), திராவிடும் (18) சிறப்பாக விளையாடி 13.1 ஓவ‌ர்க‌ளி‌ல ் வெற்றி இலக்கை எட்டினர்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்த செளரவ் கங்கூலி ஆட்ட நாயகனாகவும், 3 டெ‌ஸ்‌ட் போ‌ட்டிக‌ளி‌ல் 19 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌‌ழ்‌த்‌திய ஹர்பஜன் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி..!

IND vs BAN: 146க்கு ஆல் அவுட்.. 95 ரன்கள் இலக்கு! வங்கதேசத்தை ஸ்தம்பிக்க செய்த இந்தியா!

8 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் வங்கதேசம்.. இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?

வங்கதேச வீரரை பாடி ஷேமிங் செய்தாரா ரிஷப் பண்ட்?... கிளம்பிய சர்ச்சை!

சச்சினை முந்தி கோலி படைத்த சாதனை…!

Show comments