Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவுட் கொடுக்கப்படாமல் தப்பித்த இயன் பெல்! தொழில்நுட்பத்தின் அலங்கோலம்!

அவுட் கொடுக்கப்படாமல் தப்பித்த இயன் பெல்! தொழில்நுட்பத்தின் அலங்கோலம்!
, திங்கள், 18 ஜூன் 2012 (14:51 IST)
FILE
கள நடுவர் தீர்ப்பிற்கு வீரர்கள் மேல் முறையீடு செய்யும் முறை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அது குறித்த சர்ச்சை அதிகரித்து வருகிறது. அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் கண்ட இயன் பெல்லைக் காப்பாற்றியது மேல் முறையீடு தீர்ப்பே.

ஏற்கனவே 2011 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவரது விக்கெட்டை டீ.ஆர்.எஸ். காப்பாற்றிக்கொடுக்க ஜெயிக்கவேண்டிய இந்திய ஆட்டம் டிரா ஆனது நினைவிருக்கலாம்.

பிறகு அதே தொடரில் அயர்லாந்துக்கு எதிராக கடுமையான தீர்ப்புகள் இதே மேல்முறையீட்டுத் தொழில்நுட்பத்தினால் ஏற்பட, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய அணிகள் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருவதால் மேல்முறையீட்டு தொழில்நுட்பத்திற்கு கண்மூடித் தனமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அன்று மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 23 ரன்களில் இருந்த பெல் மட்டையில் பட்டு பந்து கேட்ச் ஆனது. ஆனால் நடுவர் தீர்ப்பை மேல் முறையீடு செய்தும், பந்து மட்டையில் பட்டுச் சென்றது நன்றாகத் தெரிந்தும் சந்தேகத்தின் பலனை பெல்லுக்கு வழங்கினர் நடுவர்கள், அன்று இங்கிலாந்து சரியாக 114 ரன்களில் வெற்றி பெற்றது. பெல் எடுத்த ஸ்கோர் 126!

அவர் பந்தைத் தொட்டு விட்டு ஆட்டமிழந்து எதிரணியினரை எதிர்கொள்ள மீண்டும் ஆடும் அருவறுப்புக்குகந்த செயலைச் செய்து விட்டு ஆட்டம் முடிந்த பிறகு "ஆமாம்" என்று வெட்கமில்லாமல் கூறிவிட்டு தனது சதத்தை எவ்வாறு திட்டமிட்டு அடித்தேன் என்று அவர் கொடுத்த விளக்கம் படு மோசம்.

சிறிது கூட சீரான தன்மை இல்லாத நடுவர் தீர்ப்பு மேல் முறையீட்டை இந்தியா எதிர்த்தால் இந்தியாவை மொத்த ஐ.சி.சி. உறுப்பு நாடுகளும் போட்டு கும்மி எடுத்து விடுகின்றன.

நடுவரின் தரத்தைப் பார்த்து டீ.ஆர்.எஸ். தீர்ப்பு வழங்கப்படுகிறது. சைமன் டாஃபெல் அவுட் கொடுத்து விட்டால் அதனை மேல் முறையீடு செய்யும்போது அந்த நாட்டாமையின் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை.

வேறு ஏப்பை சோப்பை நடுவர் அவுட் கொடுத்தால் அல்லது அவுட் கொடுக்காமல் இருந்தால் 10 முறை ரீபிளே பார்த்து 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு' என்கின்றனர் 3வது நடுவர்கள்.

அதனால்தான் தோனி மிக அழகாகக் கூறினார். ஒன்று தொழில் நுட்பத்தை நம்பு அல்லது மனிதனை நம்பு இரண்டையும் கலப்பது மிக மோசம் என்றார்.

ஏன் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா இதனை ஆதரிக்கிறது என்றால் அவர்களது சொத்தை ஸ்பின்னர்களும் பெரிய துணைக் கண்ட வீரர்கள் விக்கெட்டை எடுத்து விடக்கூடிய வாய்ப்பை இந்த டீ.ஆர்.எஸ். வழங்கி விடுகிறது.

டீ.ஆர்.எஸ். மூலம்தான் அஜந்தா மெண்டிஸ் புகழ் பெற்றார். விக்கெட்டுகளைக் கொட்டி குவித்தார். இப்போது அவர் இலங்கை அணியிலேயே இல்லை.

எனவே உண்மையான பந்து வீச்சுத் திறனை வளர்க்க நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு உதவாது.

மிகவும் வெளிப்படையாக நாட் அவுட் என்று தெரிவதையும், வெளிப்படையாக அவுட் என்று தெரிவதையுமே தொழில் நுட்ப உதவியுடன் நியாயமாக தீர்ப்பளிக்காத பட்சத்தில் எதற்கு அந்த தொழில் நுட்பம் என்று இந்தியா கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை!

Share this Story:

Follow Webdunia tamil