Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ் கெயிலை ஒழிக்க முயலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம்

கிறிஸ் கெயிலை ஒழிக்க முயலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம்
, வியாழன், 16 ஜூன் 2011 (13:12 IST)
FILE
ஏப்ரல் மாதம் வானொலிக்கு பேட்டி அளித்து மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது விமர்சனம் வைத்த ஒரே காரணத்திற்காக அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் பழி வாங்கி வருகிறது.

மேலும் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வையே ஒழித்துக் கட்ட முயற்சி செய்வதாகவும் மேற்கிந்தியத் தரப்பு கிரிக்கெட் வாரிய வாட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே கிறிஸ் கெய்ல் எதிர்காலம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

கெய்ல் கொடுத்த வானொலி பேட்டி விவகாரத்தில் அவர் தன் பேச்சைத் திரும்பப் பெறவேண்டும் அதன் பிறகு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டும் என்றும் அதன் பிறகே மன்னித்து கெய்லை ஏற்றுக் கொள்வார்களாம். இது வீரர்கள் சங்கத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள செய்தியாகும். ஆனால் இப்போதைக்கு கெய்ல் விஷயத்தில் பிரகாசசமாக எதுவும் இல்லை என்று ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளது வீரர்கள் சங்கம்.

கெய்ல் மீது தவறு என்ன? உடல் நிலைத் தகுதிக்காக பயிற்சியில் உள்ள ஒருவரை எந்த வித காரணத்தையும் அறிவிக்காமல் அணியில் தேர்வு செய்யாமல் இருந்தார்கள். அப்போது இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராயல் ஸாலஞ்சர்ஸ் அணியிலிருந்து அழைப்பு வர அவர் இந்தியா வந்து விடுகிறார். இதில் கெய்லின் தவறு என்ன என்று தெரியவில்லை.

மேலும் இதன் பிறகே அவர் ஜமைக்கா வனொலிக்கு பேட்டியளித்து வாரியம், பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் மீது புகார்களை அடுக்கினார். குறிப்பாக ராம் நரேஷ் சர்வாணை பயிற்சியாளர் கிப்சன் பாடாய் படுத்தி அவரது தன்னம்பிக்கையையே இழக்கச் செய்துள்ளார் என்று கூறினார். அவர் கூறியதன் மீதான நடவடிக்கையை பயிற்சியாளரைக் கண்காணிப்பதில் திருப்பாத வாரியம் கிறிஸ் கெய்லை மண்டியிட அழைக்கிறது!

இந்தப் பேச்சையெல்லாம் தற்போது அசை போட்டுக் கொண்டிருக்கும் வாரிய நிர்வாகிகள் கெய்லை ஊத்தி மூட முயற்சி செய்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் ஆண்ட்ரூ சைமண்ட்சைச் செய்தது போலவே கிறிஸ் கெய்லையும் செய்து விட தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

webdunia
FILE
நேற்றைய பேச்சு வார்த்தையின் போது கெய்லும் உடனிருந்ததாகத் தெரிகிறது. பேச்சு வார்த்தைகளின் போது இருதரப்பிலும் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் அப்போது வீரர்கள் சங்கத் தலைவர் தினாநாத் ராம்நரைண் ஒரு நேரத்தில் கோபமடைந்து தன் நாற்காலியைத் தூக்கி மேற்கிந்திய வாரிய தலைமைச் செயலர் எர்ன்ஸ்ட் ஹிலைரை அடிக்கச் சென்றதாக ஒருதரப்பு கூறுகிறது.

அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று மற்றொரு தரப்பு கூறுகிறது. உண்மையில் என்ன நடந்ததென்று கிறிஸ் கெய்லே வாயைத் திறந்தால்தான் தெரியவரும்.

கிறிஸ் கெய்ல் கெஞ்சிக் காலில் விழவேண்டும் என்று மேற்கிந்திய வாரியம் எதிர்பார்க்கிறது. ஆனால் கெய்ல் தன்பக்கம் தவறில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். இதில் சுமுக முடிவு ஏற்பட வாய்ப்பில்லை என்று வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முதலில் வீரர்கள் இல்லாவிட்டால் வாரியங்கள் இல்லை என்பதை வாரியத் தலைகள் புரிந்து கொள்ளவேண்டும். மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியவை நடந்து கொள்ளும் முறை பற்றி கேள்வி கேட்க ஆளில்லை.

கிரிக்கெட் வாரியங்கள் ஒரு அரசாங்கமாகவே இங்கெல்லாம் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது, அல்லது தொடர முடிந்தாலும் கோர்ட் அதில் தலையிட முடியாது என்ற நிலவரங்கள் மாற வேண்டும்.

ஷாகித் அஃப்ரீடி கதையும் இதேதான். வாரியச் செயல்பாடுகள் மீது விமர்சனம் செய்தால் அதனை ஏத
webdunia
FILE
தங்கள் சொந்த விஷயமாக எடுத்துக் கொண்டு வாரியங்கள் பழி தீர்ப்புப் படலத்தில் இறங்கினால் அந்த நாட்டுக் கிரிக்கெட் அழிந்து போகும்.

வீரர்களுக்கு முக்கியத்துவம் தரும் முன்னாள் வீரர்களிலிருந்தே கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்படவேண்டும். தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை முன்னாள் அதிகாரிகள் என்று இவர்கள் கையிலெல்லாம் ஒரு முக்கியப் பொறுப்புச் சிக்கினால் அது அழிவில்தான் போய் முடியும்.

எனவே அந்தந்த நாட்டு அரசு வீரர்கள் விவகாரங்களில் உடனடியாகத் தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும்.

அல்லது விளையாட்டு அமைப்புகளை அரசு தன் கையில் எடுத்துக் கொள்ளவேண்டும் மற்ற உள் பொறுப்புகளை முன்னாள் வீரர்களிடத்தில் அளிக்கவேண்டும். இவ்வாறு செய்தால்தான் அஃப்ரீடி, கிறிஸ் கெய்ல், சைமன்ட்ஸ் போன்ற வீரர்களுக்கு ஏற்படும் கதி இன்னும் பல வீரர்களுக்கு ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil