Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிந்த ஷூக்களை ஒட்டி விளையாடும் ஜிம்பாப்வே வீரர்கள்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (12:19 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் வீரர் ரியான் பர்ல் வெளியிட்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக இருந்தது. அந்த அணியில் இருந்து ஆண்டி பிளவர், கிராண்ட் பிளவர், ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் ஹென்றி ஒலங்கா போன்ற சர்வதேச தரம்மிக்க வீரர்கள் வந்தார்கள். ஆனால் அதன் பிறகு அந்த அணி காணாமல் போனது. இப்போது உப்புக்கு சப்பாணி அணியாகவே கிரிக்கெட் உலகில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த அணியின் வீரர் ரியான் பர்ல் சமிபத்தில் தனது கிழிந்த ஷூக்களை டிவிட்டரில் வெளியிட்டு ‘எங்களுக்கு மட்டும் ஸ்பான்சர் கிடைத்தால் ஒவ்வொரு சீர்ஸ் முடிந்ததும், இதுபோல கிழிந்த ஷூக்களை நாங்கள் ஒட்ட வேண்டி இருக்காது’ என கூறியிருந்தார். இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர். பலரும் அந்த அணி வீரர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதையடுத்து பூமா நிறுவனம் இப்போது ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments