Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இரண்டு போட்டிகள் ரத்து

Webdunia
திங்கள், 27 மே 2019 (07:23 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்றன
 
இந்த நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டு போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் மழை காரணமாக நேற்று நடைபெறவிருந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்ப்ட்டது. தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது
 
இந்த நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் இந்தியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா, இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments