Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் ஜெர்மனியை வெளியேற்றிய தென்கொரியா

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (06:51 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை தென்கொரியா அதிரடியாக தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு செல்லவிடமால் வெளியேற்றியுள்ளது. இதனால் ஜெர்மனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய முக்கிய ஆட்டட்தில்  தென்கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்குக் செல்ல முடியும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி இந்த போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் தென்கொரியா அணி ஜெர்மனிக்கு கடுமையான சவாலாக இருந்ததால் போட்டியின் 90 நிமிடம் வரை அதாவது போட்டியின் முடிவு வரை  இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடுவர் 6 நிமிடங்கள் கூடுதலாக விளையாட அனுமதியளித்தார். இந்த ஆறே நிமிடங்களில் தென்கொரிய அணி 2 கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

அடுத்த கட்டுரையில்
Show comments