Webdunia - Bharat's app for daily news and videos

Install App

294 ரன்கள்: புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீரர்கள்

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (21:56 IST)
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபுசாஞ்சே புதிய சாதனை செய்துள்ளனர். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் முதல் நாளில் 294 ரன்கள் எடுத்து சாதனை செய்துள்ளனர்
 
இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் ஜஸ்டின் லங்சர் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் கடந்த 1998ம் ஆண்டு 279 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களின் இரண்டாவது விகெட் பார்ட்னர்ஷிப் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது முறியடிக்கப்பட்டது மட்டுமன்றி இன்னும் இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் இருப்பதால் இன்னும் பல சாதனைகள் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.  4 ரன்களில் பர்ன்ஸ் அவுட் ஆனாலும் டேவிட் வார்னர் மற்றும் லாபுசாஞ்சே அதிரடியாக விளையாடி வருவதால் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 302 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர் 166 லாபுசாஞ்சே 126 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments