Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:05 IST)
நியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ”இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. டாஸ் வெல்ல முடியாததே அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்டது. இந்த ஆட்டத்தில் மயங்க் மற்றும் ரஹானே தவிர பேட்டிங்கில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களும் மிகவும் சுமாராகவே ஆடினார்கள். நியூஸிலாந்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது அந்த அணியின் கடைசி 3 வீரர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இந்த தோல்விக்காக மக்கள் எங்களை பேசலாம். ஆனால் எப்போது ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. எதிரணியும் வெற்றி பெரும் நோக்கில்தான் விளையாட வருகிறார்கள். வெளியாட்கள் என்ன சொல்வார்கள் என நினைத்து பார்க்க தொடங்கினால் எந்த ஆட்டத்தையும் சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியாது. இந்த தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments