Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக மனிதன் என்பதை மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்

Webdunia
ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2015 (20:00 IST)
உலக தடகள போட்டியில் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்று உலகச் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
 

 
சீனா தலைநகர் பெய்ஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 9.79 நொடிகளில் 100 மீட்டரை ஓடி அவர் தங்கப் பதக்கம் வென்றார்.
 
இவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 நொடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதாவது உசைன் போல்டுக்கும், ஜஸ்டின் காட்லினுக்கும் 0.01 விநாடிகளே வித்தியாசம்.
 
ஒரே நேரத்தில் ஓடிய அமெரிக்காவின் ப்ரொமேல் மற்றும் கனடாவின் டெ கிராஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர். இந்த இருவரும் 100 மீட்டர் தூரத்தை 9.92 நொடிகளில் ஓடினர். அமெரிக்கரான மைக்கேல் ரோட்ஜர்ஸ் 9.94 நொடிகளில் ஓடி நான்காம் இடம் பெற்றார்.
 
ஒன்பது வீரர்கள் ஓடிய இந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கடைசி இடம் போட்டிகளை நடத்தும் நீனாவின் பிங் டியா சூவுக்கு கிடைத்தது. அவர் ஓடிய நேரம் 10.06 நொடிகள் ஆகும்.
 
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது அவரிடமிருந்து ஜஸ்டின் காட்லின் அதைக் கைப்பற்றுவாரா எனும் எதிர்பார்ப்புகளூக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது. ஆனால், உசைன் போல்ட் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
 
இது குறித்து உசைன் போல்ட் கூறுகையில், ”இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், நான் எல்லா சீசனிலும் போராடியே வெற்றியை அடைந்திருக்கிறேன். இது என்ன பிரச்சனை என கண்டறிய கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறது. இது அனைத்தும் சேர்ந்து நடத்தப்படும்போதிலும், நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments