Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல்.. இரண்டாவது போட்டியிலும் குஜராத் தோல்வி..!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (07:54 IST)
மகளிர் ஐபிஎல்.. இரண்டாவது போட்டியிலும் குஜராத் தோல்வி..!
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் மும்பை இடம் தோல்வி அடைந்த குஜராத் அணி நேற்று நடந்த இன்னொரு போட்டியில் உத்தர பிரதேச அணியிடம் தோல்வி அடைந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
மகளிர் ஐபிஎல் போட்டியில் நேற்று குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய நிலையில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 26 பந்துகளில் 59 ரன்கள் அடித்து உத்தரப்பிரதேச அணியின் கிரேஸ் ஹாரிஸ் தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் மூலம் புள்ளி பட்டியலில் குஜராத் அணி 0 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து உத்திரபிரதேச அணி 170 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் ஒரே ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் 175 ரன்கள் அடித்து அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
29 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் அடித்த உத்தர பிரதேச அணியின் கிரேஸ் ஹாரிஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments