Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பயரால் இந்திய அணி ஜெயித்தது - இங்கிலாந்து கேப்டன் புகார்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (13:27 IST)
நடுவர்களின் தவறான தீர்ப்பாலேயே இந்திய அணி இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வென்றதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.


 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று நாக்பூரில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இங்கிலாந்து அணி வெற்றி கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. ஜோ ரூட் 38 ரன்களுடன் நல்ல பார்மில் இருந்தார். அப்போது பும்ரா முதல் பந்தை வீசினார். அப்போது, பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பந்து அவருடைய காலுறையில் பட்டது. ஆனால், நடுவர் சம்ஷுதீன் அவுட் என அறிவித்தார். இதனால், அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

இந்த தோல்வி குறித்து கூறியுள்ள இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ”பும்ரா வீசிய கடைசி ஓவரில், பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டதை கவனிக்காமல், நடுவர் சாம்ஷுதீன் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது.

களநடுவரின் இந்த செயல்பாடு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.  கிட்டத்தட்ட 40 பந்துகளை சந்திருந்திருந்த ரூட் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக மாறியிருக்கக்கூடும். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால், மிகுந்த விலையை கொடுக்க வேண்டும் என நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments