Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜன் ஓவரில் பிரித்து மேய்ந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்: 2 ஓவரில் 21 ரன்கள்

Webdunia
ஞாயிறு, 11 ஏப்ரல் 2021 (20:26 IST)
நடராஜன் ஓவரில் பிரித்து மேய்ந்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்
ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியான இன்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது
 
தொடக்க ஆட்டக்காரரான ராணா மற்றும் கில் களமிறங்கிய நிலையில் 15 ரன்களில் ரஷித்கான் பந்தில் கில் அவுட்டானார். இந்த நிலையில் ராணாவுடன் தற்போது ராகுல் திரிபாதி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை கொல்கத்தா அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக காணப்பட்ட நடராஜன் இன்றைய போட்டியில் பந்து வீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பந்துவீச்சில் 2 ஓவர்களில் 21 ரன்கள் அடித்து கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் பிரித்து மேய்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புவனேஷ் குமார், ரஷித்கான் மற்றும் நபி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

SRH ஐ 80 ரன்கள் வீழ்த்திய KKR.. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு என்ன ஆச்சு?

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

அடுத்த கட்டுரையில்
Show comments