Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக கஷ்டப்பட்டு டிரா செய்தது தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (21:50 IST)
புரோ கபடி போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் படு மோசமாக விளையாடி வருகின்றது. தமிழ்தலைவாஸ் அணி கடைசியாக ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் செய்தது 
 
 
இந்த நிலையில் இன்று புனே அணியுடன் தமிழ்தலைவாஸ் அணி மோதியது. இன்றைய போட்டியிலும் தமிழ் தலைவாஸ் டிரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது, இன்றைய போட்டியில் புனே அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடைசியில் சுதாரித்த தமிழ் தலைவாஸ் அணி கடைசி நிமிடங்களில் மளமளவென புள்ளிகளை எடுத்து போட்டியை டிரா செய்தது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 36 புள்ளிகள் எடுத்து இருந்தன
 
 
முன்னதாக நடைபெற்ற இன்னொரு போட்டியில் மும்பை அணி உத்தரபிரதேச அணியை வீழ்த்தியது. மும்பை அணி 39 புள்ளிகளும் உத்தரப்பிரதேச 36 புள்ளிகளும் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியின் முடிவில்  வழக்கம்போல் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments