Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி டென்னிஸ்: தொடரும் சானிய-ஹிங்கிஸ் வெற்றி பயணம்

Webdunia
சனி, 16 ஜனவரி 2016 (13:47 IST)
சிட்னியில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.


 
 
இறுதிப்போட்டியில் பிரான்ஸின் கிரேஸியா-மெல்டிநோவிக் ஜோடியை எதிர்கொண்ட சானியா-ஹிங்கிஸ் ஜோடி 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தாலும், இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் ஜோடியை சானியா ஜோடியின் அதிரடி ஆட்டம் பின்னுக்கு தள்ளியது.
 
இரண்டாவது சுற்றை சானியா ஜோடி 7-5 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆளுக்கு ஒரு செட்டை கைப்பற்றிய நிலையில் மழை குறுக்கிட்டது. பின்னர் தொடங்கிய டை-பிரேக் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் அதிரடி ஆட்டத்தின் மூலம் அந்த செட்டை 10-5 என்ற கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
 
சானியா-ஹிங்கிஸ் ஜோடி தொடர்ந்து பெறும் 30 வது வெற்றி இதுவாகும். மேலும் 2015 லிருந்து அவர்கள் கைப்பற்றும் 10 வது சாம்பியன் பட்டம் இது. இதில் விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் அடங்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

Show comments