Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டியில் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (15:07 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று ஆடவர் 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவில் இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் சுஷில் குமார்  தங்கப்பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே கடந்த 2010, 2014 ஆகிய  ஆண்டுகளில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
இதன்மூலம் தற்பொழுது வரை இந்தியா 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments