Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து vs ஆப்கானிஸ்தான்… கவாஸ்கர் சொல்லும் ஆருடம்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (15:27 IST)
நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பற்றி இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கும்  போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும். அதனால் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வழி மேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்தியா பாகிஸ்தான் போட்டியை விட இந்த போட்டியை அதிகம் பேர் பார்ப்பார்கள். ஆப்கானிஸ்தான் போலவே இந்த போட்டியில் நியுசிலாந்து அணிக்கும் நெருக்கடி இருக்கும். அதை சமாளித்து விட்டால் அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள். 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைகளில் சிறப்பாக விளையாடி அவர்கள் இறுதிப்போட்டி வரை சென்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments