Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்த தெ.ஆப்பிரிக்கா - 5 போட்டிகளிலும் அமோக வெற்றி

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (18:24 IST)
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 5 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
 

 
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போடியில் 142 ரன்கள் வித்தியாசத்திலும், 3ஆவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது.
 
இந்நிலையில், 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ரூசோ 122 ரன்களும், டுமினி 73 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 48.2 ஓவர்களில் 296 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
ஆஸ்திரேலியா அணியில் 7 பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கேப்டன் ஸ்மித் உட்பட மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். கடைசிவரை போராடிய டேவிட் வார்னர் 173 ரன்கள் குவித்து வெளியேறினார்.
 
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றில்கூட ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகப்கோப்பை..! முதல் போட்டியில் கனடாவை பந்தாடிய அமெரிக்கா..!!

ரோஹித்தை பார்க்க க்ரவுண்டுக்குள் ஓடிய ரசிகர்! அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வார்ம் அப் மேட்ச்சில் பங்களாதேஷை பந்தாடிய இந்தியா! – 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments