Webdunia - Bharat's app for daily news and videos

Install App

61 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:54 IST)
61 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்!
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் ஒருவர் 61 ஆண்டுகளுக்கு பின் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மஹராஜ் என்பவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார். 1960-ஆம் ஆண்டிற்கு பிறகு தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி தென்னாபிரிக்காவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். நேற்றுடன் முடிவடைந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் கேஷவ் மஹாராஜ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை செய்ததை அடுத்து அந்த அணி டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது தென் ஆப்பிரிக்க அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கும் ஷமி கிடையாது.. காரணம் இதுதான்!

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments