Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 பந்துகளில் அதிரடி சதம்.. சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா..!

Mahendran
புதன், 15 ஜனவரி 2025 (14:12 IST)
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று குஜராத்தில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் ஆட்டம் தொடங்கியது முதலே கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார்.

முதல் பந்தே பவுண்டரி அடித்த நிலையில் அவர் 70 பந்துகளில் சதம் அடித்து விளாசினார். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்து உள்ளனர் என்பதும் ஸ்மிருதி மந்தனா 135 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் அணி சற்று முன் 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ஸ்மிருதி மந்தனா 135 ரன்கள் பிரதிகா ராவல் 154 ரன்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ‘ப்ளேயர் ஆஃப் தி மன்த்’ விருதைப் பெறும் பும்ரா!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ரோஹித் ஷர்மா!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்!

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments