Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் மீண்டு வருவேன்: ஸ்ரேயாஸ் அய்யர் ட்வீட்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:51 IST)
காயம் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகியுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் விரைவில் குணமாகி வருவேன் என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் அய்யருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் நான்கு மாதங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டார் என்றும் கூறப்பட்டது 
 
விரைவில் மீண்டு வருவேன்: ஷ்ரேயாஸ் ஐயர் ட்வீட்!
இதனால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் என்பதால் அவருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது
 
இந்த நிலையில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ள ஸ்ரேயாஸ் அதில் காயத்தில் இருந்து குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும், விரைவில் மீண்டு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments