Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை விமர்சித்த செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:44 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவருருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்சுக்கு அமெரிக்க டென்னிஸ் சங்கம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். போட்டியின் போது செரினாவின் பயிற்சியாளர் சைகை மூலம் செரினாவிற்கு ஹிண்ட் கொடுத்தார். இது போட்டியின் விதிமீறலாகும்.
 
மேலும் கோபத்தில் செரினா டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார். இதுவும் ஒரு விதிமீறலாகும். எனவே நடுவர் செரினாவின் புள்ளியை குறைத்தார்.  
இதனால் கடுப்பான செரினா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவரை ஒரு பித்தலாட்டக்காரர் என கடுமையாக விமர்சித்தார். இந்த போட்டியில் செரினா  6-2, 6-4 எனும் நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிதல், பயிற்சியாளர் ஹிண்ட் கொடுத்தல், நடுவரை கடுமையாக திட்டுதல் ஆகிய விதிமீறலுக்கு செரினா மொத்தம் ரூ. 12 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Mr fix it என்றால் அது ராகுல்தான்… புகழ்ந்து தள்ளிய ஆஸி வீரர்!

ஒரே நாளில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட இந்தியாவால் மட்டும்தான் முடியும்- ஆஸி வீரர் பாராட்டு!

நம்மிடம் இருப்பதே ஒரே ஒரு ஸ்டார்… ஏன் இப்படி பண்றீங்க? – பாக். முன்னாள் வீரர் ஆதங்கம்!

சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!

கோலி எப்போதும் எனக்கு ஆதரவாகதான் இருந்தார்.. அவரால் என் இடம் பறிபோகவில்லை – ராயுடு பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments