Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா 200 ரன்களைக் கூட தாண்டாது என கூறிய பாண்டிங் – மீம் வெளியிட்டு சேவாக் பதில்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (09:35 IST)
இந்தியா கடைசி நாளில் 200 ரன்களுக்குள் ஆல் அவ்ட் ஆகும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 200 ரன்களைக் கூட சேர்க்காமல் ஆல் அவுட் ஆகிவிடும் எனக் கூறியிருந்தார். இது இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய அணி ஐந்தாம் நாளான இன்று தனது பேட்டிங்கை தொடர்ந்து ஆடிவந்தது. கேப்டன் ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதைத் தொடர்ந்து புஜாராவோடு ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட். புஜாரா நிதானமாக விளையாட பண்ட் அதிரடியில் புகுந்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதையடுத்து சிறிது நேரத்தில் புஜாராவும் ஆட்டமிழந்தார். தற்போது இந்திய அணி 279 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

இந்நிலையில் பண்ட்டின் அதிரடி ஆட்டத்துக்குப் பிறகு சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிஷப் பண்ட் ரிக்கி பாண்டிங்குக்கு பின்னால் நின்று ஒளிந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவரைக் கிண்டல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி.. கொண்டாடிய சென்னை ரசிகர்கள்..!

ஹர்திக் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது புரியவில்லை... தினேஷ் கார்த்திக் ஆச்சர்யம்!

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments