Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் சேர்க்கவில்லை – கோலியை சாடும் சேவாக்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (11:46 IST)
நேற்றைய டி 20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் இறக்கவில்லை என சேவாக் கோலிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த  இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதையடுத்து களமிறங்கிய ஆஸியை 150 ரன்களுக்குள் சுருட்டி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

ஆனால் நேற்றைய போட்டியில் கோலியின் அணித்தேர்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி 20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசும் சஹாலை அவர் தேர்வு செய்யவில்லை. ஆனால் கன்கசனில் உள்ளே வந்த அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதே போல நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்யவில்லை. இது குறித்து பேசியுள்ள சேவாக் ‘விதிமுறை என்றால் அது அனைவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஆனால் கோலிக்கு விதிமுறை என எதுவும் இல்லையா. அவர் சரியாக விளையாட வில்லை என்றாலும் மூன்றாம் இடத்தை விட்டுத்தர மாட்டார். ஆனால் மற்றவர்கள் இடத்தை மட்டும் மாற்றி மாற்றி கலைத்துப் போடுகிறார். ஸ்ரேயாஸ் அய்யரை அமர வைக்க ஏதேனும் காரணம் இருக்கிறதா. அவரால் கூட தன்னை ஏன் இறக்கவில்லை எனக் கேட்க முடியாத சூழல் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments