Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (12:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் போட்டி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 14ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இதுவரை முக்கியமான விக்கெட்டுகள் விழுந்துள்ளன. ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய நான்கு விக்கெட்டுகளும் ஒற்றை இலக்க ரன்களில் விழுந்தன.

இந்த நிலையில், கே.எல்.ராகுல் மட்டுமே நிலைத்து விளையாடி வருகிறார். அவர் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது ரோஹித் சர்மா களத்தில் இறங்கியுள்ளார்.

ஆனால் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தற்போது  மாலை 4:45 மணி ஆகிவிட்டததால், இன்றைய ஆட்டம் இதோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

பும்ரா மீது இனவாத கமெண்ட்டை பிரயோகித்த வர்ணனையாளர் இஷா குஹா!

அடுத்த கட்டுரையில்
Show comments