Webdunia - Bharat's app for daily news and videos

Install App

508 ரன்கள் நாட் -அவுட்: 13 வயது பள்ளி மாணவர் சாதனை!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (13:42 IST)
508 ரன்கள் நாட் -அவுட்: 13 வயது பள்ளி மாணவர் சாதனை!
13 வயது பள்ளி மாணவர் ஒருவர் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 508 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தது பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் யாஷ் என்பவர் பள்ளிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார்
 
40 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் அவர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணியில் விளையாடினார். இந்த அணி 714 ரன்கள் எடுத்தது என்பதும் இதில் யாஷ் 508 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் 
 
யாஷ் தனது இன்னிங்ஸில் 178 பந்துகளை சந்தித்து 81 பவுண்டர்கள் மற்றும் 18 சிக்சர்களை அடித்தார் என்பதும் இவரது ஸ்கோர் உலக சாதனை ஆக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
715 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சித்தேஸ்வர் வித்யாலயா அணி வெறும் 5 ஓவர்களில் ஒன்பது ரன்களுக்கு ஆட்டம் இழந்ததை அடுத்து சரஸ்வதி வித்யாலயா அணி 709 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments