Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரர் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு அர்ஜுனா விருது; சானியாவுக்கு கேல் ரத்னா விருது

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (12:38 IST)
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு சானியா மிர்சாவிற்கும், அர்ஜூனா விருது தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கும் வழங்கப்பட்டது.
 

 
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ராஜீவ் காந்திகேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அர்ஜூனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
மேலும், பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), தீபாகர்மாக்கர் (ஜிம்னாஸ்டிக்), ஜித்து ராய் (துப்பாக்கிச் சுடுதல்), சந்தீப் குமார் (வில்வித்தை), மந்தீப் ஜங்க்ரா (குத்துச்சண்டை), பபிதா(மல்யுத்தம்), பஜ்ரங் (மல்யுத்தம்), ரோகித் சர்மா (கிரிக்கெட்), கிதாம்பி ஸ்ரீகாந்த் (பேட்மிண்டன்), ஸ்வார்ன் சிங் விர்க் (படகு), சந்தோய் தேவி (வுஷூ), சரத் கெயக்வாட் (பாரா-நீச்சல்), எம்.ஆர்.பூவம்மா (தடகளம்), மன்ஜீத் சில்லார் (கபடி), அபிலாஸா மாத்ரே(கபடி), அனுப் குமார் யமா (ரோலர் ஸ்கேட்டிங்) ஆகிய மேலும் 16 பேரும் அர்ஜூனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமையன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார். முதல் நபராக சானியா மிர்சா, கேல் ரத்னா விருதை பெற்றுக்கொண்டார். அவருக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் பாராட்டுப் பட்டயம் வழங்கப்பட்டது.
 
அதன்பின் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்பட 17 பேரும் அர்ஜூனா விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டது.
 
சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது அனுப் சிங் (மல்யுத்தம்), நவல் சிங் (பாராலிம்பிக்), நிகர் அமின் (நீச்சல்), எஸ்.ஆர்.சிங் (குத்துச்சண்டை), ஹர்பன்ஸ் சிங் (தடகளம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
 
அதேபோல, விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கான தியான் சந்த் விருது ரோமியோ ஜேம்ஸ் (ஹாக்கி), ஷிவ் பிரகாஷ் மிஸ்ரா (டென்னிஸ்), டி.பி.பி. நாயர் (வாலிபால்) ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Show comments