Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்ஸியை புகழ்ந்த ரசிகர் மீது ரொனால்டோ கோபம்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (14:41 IST)
சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் என்று ரசிகர் கூறியதால் ரொனால்டோ கோபம் அடைந்தார்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ. இவர், மான்செஸ்டர் யுனைட்டர் கிளப் அணியில் இருந்து விலகி, சமீபத்தில், சவூதி அரேபியாவைச் சேர்ந்த அல் நாசர் என்ற கிளப்பில் இணைந்தார்.

தற்போது நடந்து வரும் சவூதி ப்ரோ லீக் போட்டியில், அல் நசர் அணிக்கான ரொனால்டோ விளையாடி வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய வீரராகவும் ரொனால்டோ செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், போட்டி முடிந்து, அறைக்கு திரும்பிய  ரொனால்டோவிடம் ஒரு இளம் ரசிகர் உங்களைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் என்று கூறினார்.

இதைக்கேட்டு, ரொனால்டோ கோபமடைந்து, அவரைக் கடந்துகொண்டதுடன் வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.  இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், ரியல்மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மான்செஸ்டர் அணிக்காக 103 கோல்களும், ஜூவென்ஸ்ட் அணிக்காக 81 கோல்களும், அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து மொத்தம் 503 கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு இடையே யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ரசிகர்களிடையே இருந்து வருவது முற்றுப்பெறாது போலும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் ஜெய்ஸ்வால்?

நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments