Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா செய்த சாதனை!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:06 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் தற்போது இந்திய அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி சற்று முன் வரை 18.4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியுள்ள ரோஹித்சர்மா ஒரு புதிய சாதனை செய்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காராக  விளையாடிய ஒரே வீரர் ரோகித் சர்மா என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது
 
கடந்த 2009ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் போதும், 2018 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியிலும், தற்போது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித்சர்மா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments