வலைப்பயிற்சிக்கு வந்த வீரர்களை வச்சு ஜெயிச்சுட்டாங்க – ரிக்கி பாண்டிங் வேதனை!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (10:28 IST)
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெற்றிப் பெற்றுள்ளதை அடுத்து ஆஸ்திரேலிய அணியைக் கடுமையாக சாடியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

நான்காவது போட்டியின் இறுதிநாளின் போதே அஸ்திரேலிய அணியைக் கடுமையாக சாடும் விதமாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸி அணி வீரர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் ‘இந்த தொடரை ஆஸி டிரா செய்ய முயன்றால் அது கடந்த முறை இந்தியாவிடம் அடைந்த தோல்வியை விட மோசமானது. அவர்கள் டிரா செய்வதற்குதான் முயல்வார்கள். ஆனால், ஆஸ்திரேலிய அணி டிரா செய்யும் மனநிலையோடு இல்லாமல், வெற்றிக்காக விளையாடி தொடரைக் கைப்பற்றி வெல்ல வேண்டும்.’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரையே வென்றுவிட்டது. இப்போது இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங் ‘சென்ற முறை நாம் தோற்றபோது வார்னர் இல்லை, ஸ்மித் இல்லை என்றோம். ஆனால் இப்போது நாம் முழு பலத்தோடு இருக்கிறோம். ஆனாலும் வலைப்பயிற்சிக்கு பந்துவீச வந்த வீரர்களை வைத்து நம்மை தோற்கடித்துவிட்டார்கள்.  இந்தியா ஏ அணியை விட நாம் மோசமாகி விட்டோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு நஷ்டத்தை உண்டாக்கினாரா அஸ்வின்.. வழக்கம் போல் நகைச்சுவையுடன் பதிலடி..!

நேற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்த ஹீரோ.. இன்று ஜீரோ.. கேமரூன் க்ரீன் பரிதாபம்..!

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments