Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க ஆட்டக்காரர்களை சீக்கிரமாக இழந்த இந்தியா – மழையால் ஆட்டம் பாதிப்பு!

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (10:46 IST)
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் மழை குறுக்கிட்டதால் போட்டி தாமதமாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லபுஷான் 108 ரன்களும், பெய்ன் 50 ரன்களும் வேட் 47 ரன்களும் எடுத்னர். இந்திய பந்துவீச்சாளர்களில் மிக அபாரமாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான ஷ்ப்மன் கில்லை 7 ரன்களில் பறிகொடுத்தது. அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களையும் இழந்து தடுமாறிய போது, நிதானமான போக்கை கடைபிடித்து ரஹானேவும், புஜாராவும் தடுப்பாட்டம் ஆடினர். இந்நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணி 62 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments