பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (08:01 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆர்யா 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் ஒரு ஓவர் மட்டுமே வீசியபின் மழை பெய்த. அதன் பின் மழை நிற்கவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி  வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டிக்கு பின் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் குஜராத், டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments