Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிபட்ட இடங்களில் எல்லாம் அப்பாவுக்கு முத்தம் கொடுப்பேன் – புஜாராவின் மகள்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (16:36 IST)
நடந்து முடிந்துள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இப்போது ஊர் திரும்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக நீண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி 20 மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா அணியை நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கரைதேற்றினார்.

நான்காவது டெஸ்ட் போட்டியில் சுவர் போல நின்று விக்கெட்கள் விழாத வண்ணம் ஆடிய அவருக்கு பவுன்ஸர்களாக போட்டு உடலில் பல இடங்களில் அடி கொடுத்தனர் ஆஸி வேகப்பந்து வீச்சாளர்கள். இந்நிலையில் இப்போது புஜாராவின் மகள் அதிதி ‘அப்பாவுக்கு அடிபட்ட இடங்களில் எல்லாம் முத்தம் கொடுப்பேன். அப்போது காயங்கள் சரியாகிவிடும்’ எனக் கூறினார். இது சம்மந்தமாக புஜாரா ‘என் மகள் கீழே விழும் போதெல்லாம் நான் முத்தம் கொடுப்பேன். அதுபோல இப்போது என் மகளும் அவளுடைய முத்தமும் என் காயங்களை ஆற்றும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments