Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (16:33 IST)
ஆசிய கோப்பை போட்டியில் இன்றை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. 
 
கடந்த  19ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில், 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்தியா - பாகிஸ்தான் அணி மீண்டும் மோத இருக்கிறது. 
 
சற்று முன்னர் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய பவுலிங் வீரர்கள் ஃபுல் பார்மில் உள்ளனர்.
கடைசி ஆட்டத்தைப்போல பாகிஸ்தான் வீரர்களை தோற்கடிப்போம் என ரோகித் ஷர்மா ஏற்பனவே கூறியிருந்தார்.
 
ஆனால் போன ஆட்டத்தில் தோற்றதற்கு இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் முனைப்புடன் களமிறங்க இருக்கிறது. இந்த போட்டியில் யார் வெல்லப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments