Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இதுதான் முதல்முறை.. 4 போட்டிகளில் பாகிஸ்தான் தொடர் தோல்வி..!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (10:34 IST)
உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மோசமான சாதனையை செய்துள்ளது.  

இந்தியாவுடன் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அதன் பின்னர் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் விளையாடிய போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாததால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.  50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளதை அடுத்து அந்த அணியை அணியின் நிர்வாகிகள் மற்றும் வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  

ஏற்கனவே பாகிஸ்தான் அணி  உலகக்கோப்பை தொடரில்  இதுவரை  6 போட்டிகளில் விளையாடி அதில் நான்கில் தோல்வி அடைந்து விட்டது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் மூன்றிலும் வெற்றி பெற வேண்டும் அதிலும் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்வது என்பது மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வினோத் காம்ப்ளி!

சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

கோலி இடத்தில் நிதீஷ்குமார் இறங்க வேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து!

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

அடுத்த கட்டுரையில்
Show comments